Monday, September 24, 2007
Sunday, September 23, 2007
Anna Praasanam - Manthrams
அன்ன ப்ராசனத்திற்கு நல்லநாள் தேர்ந்தெடுக்க நிபந்தனைகள்: பொதுவாக குழந்தையின் ஜன்ம நக்ஷத்திரத்தன்று பண்ணினால் நாள் பார்க்கத் தேவையில்லை. மற்றபடி எந்த மாதத்திலும் மரண யோகம் அற்ற திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பண்ணிக் கொள்ளலாம். அன்ன ப்ராசனத்திற்கு பத்தாம் இடம் சுத்தம் உள்ள லக்னத்தில் பண்ண வேண்டும் என்பது பஞ்சாங்க விதி. பரந்தாமன் பஞ்சாங்கத்தைப் பார்த்து லக்னம் குறிக்கவும். உதவி தேவையானால் ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.. அன்ன ப்ராசனம் வைதீக ப்ரயோகம். ஜாத கர்மா நாம கரணம் ஆன குழந்தைகளுக்கு அடுத்தபடியாக அன்னப்ராசனம் பண்ணவேண்டும். ஆயுஷ்ய ஹோமம் பண்ணி அதில் மீதியான ப்ரசாதத்தைக் கொண்டுதான் அன்ன ப்ராசனம் பண்ணுவது வழக்கம். ஆயுஷ்ய ஹோமம் முன்பே பண்ணியிருந்தாலோ, அல்லது அன்ன ப்ராசனத்திற்கு மட்டும் தேவையான மந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. சிறிதளவு சுத்த அன்னம் தயார் செய்து அதைப் பெருமாளுக்கு நிவேதனம் செய்துவிட்டு, கொண்டு வைத்துக் கொண்டு.. கூடத்தில் கோலம் போட்டு அதற்கு பின்னால் இரு மணைகள் சேர்த்து அதிலும் கோலம் போட்டு, கிழக்கு முகமாக அதில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் இரண்டு பில் தர்பம் பவித்ரம் போட்டுக்கொண்டு, ஓம் அஸ்மத் குருப்யோ நம: முதல் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் வரையில் சொல்லிக்கொண்டு, (குழந்தையின் நக்ஷத்திரம் ராசி யை ) ............ நக்ஷத்ரே ...........ராசெள ஜாதஸ்ய அஸ்ய மம குமாரஸ்ய அன்ன ப்ராசனம் கரிஷ்யே. என்று சங்கல்பித்துக்கொண்டு அக்னி பகவானை த்யானம் செய்து கொண்டு அந்த அன்னத்தை அக்னி பகவானுக்கு அர்ப்பணம் செய்வதாக எண்ணிக்கொண்டு கீழ் வரும் மந்திரத்தைச் சொல்லுக. अयुष्टे विश्वतोधधतु अयमग्निः वरेण्यः पुनस्ते प्राण आयति परायक्ष्मं स्वामितोम् आयुर्दाऽग्ने हविषो जुषाणः गृतप्रतीकः गृतयोनिरेति गृतं पीत्वा मधुचारु कव्यं पितेव पुत्रं अभिरक्षदादिमम्॥ தமிழில் :- ஆயுஷ்டே விச்வதோததது அயமக்நி: வரேண்ய: புனஸ்தே ப்ராண ஆயாதி பராயக்ஷ்மம் ஸ்வாமிதோம். ஆயுர்தாஅக்நே ஹவிஷோ ஜுஷாண: க்ருதப்ரதீக: க்ருதயோநிரேதி க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம் பிதேவபுத்ரம் அபிரக்ஷதாதிமம். ட்ரான்ஸிலிட்டரேஷன் : ayuṣṭe viśvatodhadhatu ayamagniḥ vareṇyaḥ punaste prāṇa āyati parāyakṣmaṁ svāmitom āyurdā'gne haviṣo juṣāṇaḥ gṛtapratīkaḥ gṛtayonireiti gṛtaṁ pītvā madhucāru kavyaṁ piteva putraṁ abhirakṣadāidimam|| அக்னயேதம் நமம என்று சொல்லி விட்டு: தங்கம் அல்லது வெள்ளி அல்லது சாதாரண காயினைக் கொண்டு அன்னத்தை அதனால் எடுத்துக் கொண்டு குழந்தையை தந்தை மடியில் வைத்துக்கொண்டு கீழ் வரும் மந்திரத்தைச் சொல்லி மூன்று முறை ஊட்ட வேண்டும். आयुरसि विश्वायुरसि सर्वायुरसि सर्वमायुरसि सर्वम्मे आयुर्भूयातुसर्वमायुः गेषम्। āyurasi viśvāyurasi sarvāyurasi sarvamāyurasi sarvamme āyurbhūyātu sarvamāyuḥ geṣam | ஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி ஸர்வம்மே ஆயுர்பூயாத் ஸர்மாயு: கேஷம் என்று சொல்லி சாதத்தை தாயாரும் கொஞ்சம் ஊட்டிவிட்டு, மாமா இருந்தால் அவரையும் சிறிது கொடுக்கச் சொல்லி, பின்னர் குழந்தையின் தந்தை கொஞ்சம் தீர்த்தம் ஒரு ஸ்பூனால் குழந்தைக்கு கீழுள்ள மந்திரத்தைச் சொல்லி ஊட்டவும். आपयितु वावु भेषजीः। आपः अमीवचातनीः। आपयितु वावु भेषजीः। आपः अमीवचातनीः। आपः सर्वस्य भेषजीः। तास्ते कृण्वन्तु भेषजम्।आपः सर्वस्य भेषजीः। तास्ते कृण्वन्तु भेषजम्। भेषजमेवास्मै करोति। सर्वमायुरेधि॥भेषजमेवास्मै करोति। सर्वमायुरेधि॥ अकल मृत्यु हरणं सर्वव्यधि निवारणं अकल मृत्यु हरणं सर्वव्यधि निवारणं समस्त पाप क्षयकरम् समस्त पादोदकं शुभम्॥समस्त पाप क्षयकरम् समस्त पादोदकं शुभम्॥ āpayitu vāvu bheṣajīḥ | āpaḥ amīvacātanīḥ | āpaḥ sarvasya bheṣajīḥ | tāste kṛṇvantu bheṣajam| bheṣajamevāsmai karoti | sarvamāyuredhi || akala mṛtyu haraṇaṁ sarvavyadhi nivāraṇaṁ samasta pāpa kṣayakaram samasta pādodakaṁ śubham || குழந்தையின் வயிற்றை (துணியை நீக்கிவிட்டு) கீழுள்ள மந்திரத்தைச் சொல்லித் தடவிவிடவும். यतयिन्द्र भयामहे ततोनः अभयं कृधि मघवन् शग्धि तवतन्नः ऊतये विद्विषः विमृतोजहि स्वस्तिदाः विशस्पतिः वृत्रहा विमृतोवशि वृषेन्द्रः पुरयेतुनः स्वस्तिदाः अभयङ्करः॥ yatayindra bhayāmahe tatonaḥ abhayaṁ kṛdhi maghavan śagdhi tavatannaḥ ūtaye vidviṣaḥ vimṛtojahi svastidāḥ viśaspatiḥ vṛtrahā vimṛtovaśi vṛṣendraḥ purayetunaḥ svastidāḥ abhayaṅkaraḥ || பெரியவர்களிடம் அக்ஷதையைக் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணச்சொல்லி சேவிக்கவும். குழந்தையையும் பெற்றோரையும் உட்கார வைத்து ஹாரத்தி எடுக்கவும். சேவித்துவிட்டு மணையைவிட்டுச் சென்று பெருமாள் ஸேவிக்கவும். .