ஸ்ரீவைஷ்ணவ வைதிக ப்ரயோகங்கள்

Friday, September 18, 2009

மஹா சுதர்ஸன ஹோம வழிமுறைகள் மற்றும் பலன்கள்

ஸ்ரீ:
Niyamams-phalans-of-sudharshanahomam ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோம வழிமுறைகள் மற்றும் பலன்கள்
1. சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்? ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்;றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மைப் ¾பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு® வாழவைக்கிறார். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம். எனவே இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெற, நடத்திக்கொடுப்பவர் மிகுந்த பக்தி ச்ரத்தை, நீண்ட அநுபவம், வைராக்ய அநுஷ்டானம், நல்ல கைராசி, ©ர்ண வாக் பலிதம் இவையே மிகவும் முக்கியமாகும். இவற்றுடன் வேதாப்யாசமும் உள்ளவராயின் மிகவும் நன்மை உண்டாகும்.
2. ஸ்ரீசுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க: ஆத்தில் உள்ள பெரியவர்கள் அல்லது குடும்பத் தலைவரின் ஜன்ம மாத ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹ_ர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். விழுப்புத் தீட்டு கலக்காமல் சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும். (நல்ல பலன் ஏற்படவேண்டும் என்ற விதி உள்ளவர்களுக்கே அவர்கள் முயற்சிக்குத தக்க இப்படிப்பட்ட வாய்ப்பு தாமாகவே உருவாகும்)
3. ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தில் அல்லது எப்போதுமே பெருமாளிடம் தன்னுடைய கோரிக்கைகளை தெரிவிக்கவேண்டிய முறை: தனக்கு ஒரு சொந்த வீடு அமையவேண்டும் என்றால் ¾பெருமாளே எனக்கு ஒரு சொந்தவீடு நீ தரவேண்டும்® என்று வேண்டக்கூடாது பதிலாக ¾பெருமாளே அடியேன் ஒரு சொந்தக் குடிலை அமைத்துக்கொள்ள தேவையான சக்தியினையும், அதற்குகந்ததான மற்ற அநுகூலங்களையும் அது ஸம்பந்தமான அடியேன் முயற்சிகளில் கால தாமதமும் ஏமாற்றமும் இன்றி நல்ல இடத்தையும் நல்ல மனிதர்களையும் காட்டிக் கொடுத்து ஒரு நல்ல க்ருஹம் அமைய ஆவன செய்ய வேண்டுமாய்ப் ப்ரார்திக்கிறேன்® என்றும் வேண்டிக்கொள்ளவேண்டும். சங்கல்பத்திலேயே தங்கள் கோரிக்கைகளைச் சேர்க்க வாத்தியாரிடம் கீழ்கண்ட தகவல்களைத் தரவேண்டும். 1. தங்கள் நக்ஷத்திரம் 2. ராசி 3.கோத்திரம் 4. சர்மண் (ஆண்களுக்கு உபநயனத்தின் போதும் பெண்களுக்கு திருமணத்தின்போதும் வைக்கப்படும் வைதீக பெயர்) 5. ஹோமம் நடத்தும் யஜமானனுக்கு உறவு 6. தங்கள் கோரிக்கை (விண்ணப்பம் வெளியில் சொல்ல முடியாததாயின் நினைத்தது நிறைவேற என்று சொல்லலாம்) என்ற ரீதியில் முன்கூட்டி ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி தயாரித்து வைத்துக்கொள்வது நலம். ஹோமம் நடக்கும் காலத்தில் மந்திர சப்தம் தவிர வேறு எந்த அப சப்தமும் (பேச்சும்) இல்லாமல் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.
4. ஹோமம் நிர்ணயிக்கப்;பட்ட நாளுக்கு முதல் நாளே க்ருஹத்திலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழுக்கு மற்றும் துர்வாசனை இன்றி அனைத்து இடங்களையும் அலம்பித் துடைத்து தேவையான இடங்களில் வண்ண வண்ணமாகக் கோலமிட்டு வைக்கவேண்டும். அனைவருக்கும் மடித்துணிகள் உலர்த்தி வைக்கவேண்டும். ஹோமம் நடைபெறும் நாளில் அடிக்கடி மலம் சிறுநீர் தொந்திரவு ஏற்படாத வகையில் வயிற்றையும் உடம்பையும் தகுந்த ஆகார நியமத்துடன் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்து தீர்த்தமாடி மடி உடுத்தி வாசலில் மாவிலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரித்து வாசலில் பெரிதாக அழகாக கோலங்கள் போட்டு வைத்து, வருபவர்கள் கால் சோதித்துக் (அலம்பிக்) கொண்டு உள்ளே வருவதற்கு ஏதுவாக ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்து மொண்டு ஆள்வதற்கு ஒரு சுத்தமான பாத்திரமும் எடுத்து வைக்கவேண்டும். சாம்பிராணி து}பம் தயார் செய்து ஒவ்வொரு அறையிலும் நன்றாகப் பரவச் செய்து மணம் கமழ வைக்கவேண்டும். ஆத்தில் உள்ள பெருமாள் அறையில் உள்ள பழைய குப்பைகளை நன்றாகத் துடைத்து படங்களையும் கழற்றி நன்றாகத் துடைத்து மாட்டி வைக்கவேண்டும். பெருமாள் திருவாராதன பாத்திரங்கள் மணி, சொம்பு, ஸ்தாலி போன்ற அனைத்தையும் புளி, சாணி போட்டு கேஸவாதி 12 நாமங்களைக் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே ஜ்வலிக்கும்படியாக சுத்தி பண்ணி வைக்கவேண்டும். ஆத்தில் நம் குடும்பத்தைச் சேர்ந்த மிக நெருங்கிய பந்துக்கள் அண்ணா தம்பிகள் சித்தப்பா பெரியப்பாக்கள் ஆத்தில் உள்ள சாளக்ராம பெருமாள்களையெல்லாம் மடியாக ஏளப்பண்ணி கொண்டு வரலாம். அதுபோல் பெருமாள் விக்ரஹங்கள் இருந்தாலும் ஏளப்பண்ணலாம். ஹோமம் நடக்கப்போகும் அறையில் உள்ள வெப்பத்தால் சேதமடையக்கூடிய மெல்லிய ப்ளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், கண்ணாடி பொருட்கள் இவற்றை பத்திரமாக அப்புறப்படுத்தி வைத்துவிடுவது நல்லது.
காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும். நாம் மனதில் எண்ணுவதை மனிதர்களால் வேண்டுமானால் உணர முடியாது, பெருமாளுக்கோ, தர்ம தேவதைக்கோ அறிய முடியாமல் போகாது. தர்ம தேவதையின் தீர்ப்புகள் நம் ஒவ்வொரு எண்ணம் செயல்பாடு அனைத்தும் முடிவுறும் அந்த க்ஷணத்திலேயே வழங்கப்பட்டு பாப ஃ புண்ணிய கணக்குகள் ஒவ்வொரு நொடிக்கும் அப்டேட் செய்யப்படும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளன. அந்த நாளில் கண்ணில் படும் ஆண் பெண் அனைவரையும் பெருமாள் தாயாராகவே எண்ணியிருக்கவேண்டும். எந்த வஸ்த்துவில் எந்த இடத்தில் எந்த தேவதைகள் இருப்பரோ என எண்ணி, அலட்சிய மனோபாவம் சிறிதும் இன்றி மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். அப்படி கவனமாக இருந்து நம் சிரத்தையினால் அடுத்தவர்கள் சிரத்தை அதிகரிக்கும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். அசிரத்தையாகக் காணப்படுபவரிடம்கூட அசூயை இன்றி மிகவும் பக்குவமாக அந்த ஸன்னிவேசத்தை மாற்றி அமைக்கவேண்டும். இப்படி சிரத்தையாக இருந்து சிரத்தையாக ஹோமங்கள் நடக்கும் இடத்தில் மஹா விஸ்வாசமும் மஹா பாக்யமும் உள்ளவர்களுக்கு பெருமாள் ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக ப்ரத்யக்ஷமாவார் அந்த அநுபவமானது இதுவரை தங்கள் தங்கள் ஆயுளில் தாங்கள் எதுவெல்லாம் மஹத்தான மறக்க இயலாத இன்பம் என்று எண்ணியிருந்தீரோ அதைப்போல் பலமடங்கு இன்பம் தானாக உடல் எங்கும் பரவி மனத்தில் ஒரு அளவிடமுடியாத சாந்தியை உணரலாம். அதுவே பெருமாள் அநுக்ரஹம் பூரணமாக கிடைத்ததற்காக அறிகுறி. இந்த அநுபவம் ஏற்படாவிட்டால் தோல்வி என்று பொருள் அல்ல. அதை அநுபவிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை என்பதே பொருள். ‘பலன்” என்பதன் பொருள் என்ன? நாம் செய்யும் ஒரு செயலுக்கான எதிர் விளைவு நமக்கு அநுகூலமாக அதாவது பேவரபிளாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது இந்த ஸ{தர்சன ஹோமம் பண்ணுவதால் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பார்ப்போம்.
பலன்கள் இரண்டு வகைப்படும். 1. த்ருஷ்ட பலன் 2. அதிர்ஷ்ட பலன்
1. த்ருஷ்ட பலன்: கண்கூடாகத் தெரியக்கூடிய அல்லது அறியக்கூடிய விஷயங்கள்
2. அதிர்ஷ்ட பலன்: நேரடியாகத் தெரியாதது, காலக்ரமத்தில் உணர்ந்து அறியக்கூடியது.
த்ருஷ்ட பலன்கள்:- 1. குறிப்பிட்ட நாளில் உடல் து}ய்மை பெருகிறது.
2. மனம் து}ய்மை பெருகிறது.
3. இல்லம் து}ய்மை பெருகிறது.
4. பிறரால் கவனிக்கப்படுகிறோம்.
5. பிறரால் மதிக்கப்படுகிறோம்.
6. பிறரரால் வாழ்த்தப்படுகிறோம்.
7. சுற்றமும் நட்பும் ஓம்பப்படுகிறது,
8. இதற்குண்டான செலவில் பணம் சென்றடைபவரின் குடும்பங்கள் பிழைக்கின்றன.
9. மனிதாபிமானம், மனிதநேயம் போன்றவை வெளிப்படுகின்றன.
10. பொருமை, தன்னடக்கம், ச்ரத்தை போன்ற சிறப்பான ஒழுக்கங்களை பேணும் வைராக்யம் வருகிறது.
11. தங்களின் பண்பு நலன்கள் பிறருக்கு அறியக் கிடைக்கிறது.
12. வந்திருந்தோரின் பண்பு நலன்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.
13. புதிய தகவல்களை அறியும் வாய்ப்பினைப் பெருகிறோம்.
14. மிகுதியான அன்னங்களால் சில ஜீவன்கள் பிழைக்க வகை செய்யப்படுகிறது.
15. சில பொருட்களின் நிலை மாற்றத்தால் ஏற்படும் ரசயான விளைவுகள்.
16. வீட்டைச் சுத்தம் செய்யும்போது சில பழைய பொருட்கள் செப்பனிடப்படுகின்றன.
17. காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கின்றன.
18. சில சமயம் அறிதான சிலருடைய நட்பு கிடைக்கின்றது.
19. அசூயை உடைய வேண்டாத சிலரின் நட்பு களையப்படுகிறது.
20. அறுசுவை உண்டியை விருந்தோடு உண்ணும் வாய்ப்பு கிடைக்கின்றது.
21. தாய் தந்தையர்மீது நாம்கொண்ட அன்பு மரியாதை இவை வெளியிட வாய்ப்பு ஏற்படுகிறது,

அதிர்ஷ்ட பலன்கள்: (இவற்றில் எவற்றிற்கு இந்த ஹோமம் காரணம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது)
1. மனோதிடம் கிடைக்கின்றது.
2. வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.
3. பகவத் ஸேவையின் பேரானந்தம் கிடைக்கிறது.
4. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு ஏற்படுகிறது.
5. பாபங்கள் தொலைந்து புண்ணியங்கள் கிட்டுகிறது.
6. சத்ருக்களின் பலங்கள் குறைகிறது.
7. நண்பர்களின் உதவி பெருகுகிறது.
8. நீண்டநாள் தீராத மனக் கவலை மாறுகிறது.
9. நீண்டநாள் தீராத வியாதி நிவாரணம் பெருகிறது.
10. சுப காரியங்கள் வந்து சேர்கின்றன.
11. மஹான்களின் தரிசனங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன.
12. எதிலும் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் தெரியத் தொடங்குகின்றது.
13. எதிர்பாராத இடங்களில் இருந்து நற்செய்திகள்.
14. சொத்துகள் வாஹன விவகாரங்கள் நல்லமுறையில் தீர்வு பெறுகிறது.
15. திடீர் பணவரவு, பொக்கிஷங்கள் ஆபரணங்கள் கிடைத்தல்.
16. எதிர்பார்த்ததைவிட சுலபமாக விண்ணப்பங்கள் நிறைவேறுதல்
17. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி ஒத்துழைப்பு கிட்டுதல்
18. நற்சான்றுகள் விருதுகள் பட்டயங்கள் கிட்டுதல்.
19. நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாபங்கள் தொலைந்து நற்கதிக்கு வித்தாக அமைகிறது.
20. சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் உண்டாகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home