ஸ்ரீவைஷ்ணவ வைதிக ப்ரயோகங்கள்

Sunday, September 27, 2009

Mahalaya Tarpanam Samam-மஹாளய தர்பணம் ஸாமம்

மஹாளய தர்பணம் பண்ணிவைக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு. காண விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்குச் செல்லவும். Video recorded while performing the Mahalay Tarpanam (Samam) if you are interested click (use) the below link to see the video. http://www.youtube.com/watch?v=B1_X0Why51A

Saturday, September 26, 2009

Pitrus Sanskrit Names பித்ருக்களின் ஸம்ஸ்க்ருத பெயர்கள்

Yajur Amavasai Tarpanam - Tamil

யஜூர் வேத அமாவாசை தர்ப்பணம்
குறிப்பு:- பித்ருக்கள் காரியத்தைச் ச்ரத்தையாக செய்பவர்களின் வாரிசுகள் நல்ல புத்திமானாகவும் (செல்வம் இல்லா விட்டாலும்) பல துறைகளிலும் சிறந்த திறமையாளர்களாக இருப்பது கண்கூடு. தர்ப்பணம் செய்ய மந்திரங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பு:- கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் குறைபாடு இருக்குமானால் ஈமெயில் மூலம் தெரிவிக்கவும். எழுத்துப்பிழையானால் தாங்களே திருத்தி வாசித்துக் கொள்ளவும். கருத்துப் பிழையானால் தக்க ஆதாரத்துடன் அனுப்பி வைத்தால் உடனடியாக மாற்றங்கள் செய்து வெளியிடப்படும். தக்க ஆதாரம் என்பது பழங்கால புத்தகத்தின் நகல் படிமம். ஆதாரமில்லாவிடினும் அனுப்பப்படும் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு எம்வசமுள்ள ஏனைய புத்தகங்களில் அதற்கான ஆதாரம் காணப்பட்டால் மாற்றி வெளியிடப்படும். முக்கிய குறிப்பு:- கறுப்பு எழுத்துக்கள் மந்திரங்கள் தொடர்ந்து அவற்றைச் சொல்லிக்கொன்டு போகலாம். குறிப்புகள் நீல எழுத்தில் உள்ளன. பழகிய பிறகு அவற்றை அழித்துவிடலாம்.
யஜூர் வேதம் - ஆபஸ்தம்பம்
ஆசமனம் பண்ணி 3 பில் பவித்ரம், 3பில் ஆசனம், 3 இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம்.
வடகலையார் மட்டும்:
ஓம் அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரி வேதாந்தாச்சார்ய வர்யோமே ஸந்நிதத்ததாம் ஸதாஹ்ருதி: குருப்ய: தத்குருப்யஸ்ச்ச நமோவாகம் அதீமஹே வ்ரூணீமஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷ பூதேநமயா ஸ்வீயை: ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்.
தென்கலையார் இங்கு ஆரம்பம் வடகலை தொடர்ந்து சொல்லவேண்டும்.
ஓம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே யஸ்யத்வ்ரத வக்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் விக்னம் நிக்நந்தி சததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ஹரி: ஓம் தத் (ப்ராசீனாவீதி - பூணல் மாற்றி போட்டுக்கொள்ளவும்) ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்ரீஸ்வேதவராஹ கல்பே வைவஸ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே ஸகாப்தே மேரோ: தக்ஷpணேபார்ச்வே அஸ்மிநு வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ........................................................பார்த்திப நாம ஸம்வத்ஸரே உத்தராயனே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ வாசர: ஸெளம்ய வாசர யுக்தாயாம் ஆர்த்ரா நக்ஷத்திர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணு கரண சுப யோக சுப கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் .அமாவாஸ்யாயாம் புண்ய திதௌ ஸ்ரீபகவதாக்ஞயா வடகலை: ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் தென்கலை : பகவத் கைங்கர்யரூபம் அப்பாவழி கோத்ரம் . . . . . . . . . கோத்ராணாம் அப்பா பெயர் (பிதா) . . . . . . . . . . . (1) அப்பாவுக்கு அப்பா பெயர்: (பிதாமஹர்) . . . . . . . . . . . (2) அப்பாவுக்கு அப்பாவின் அப்பா பெயர்:(ப்ரபிதாமஹர்) . . . . . . . . . . .(3) சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் அப்பாவழி கோத்ரம் . . . . . . . . கோத்ராணாம் அம்மா உள்ளவர்கள் அதைவிட்டு அடுத்ததிலிருந்து சொல்லவும். அம்மா பெயர் (மாத்ரு): . . . . . . . . . (1) அப்பாவுக்கு அம்மா பெயர்: (பிதாமஹி) . . . . . . . . . . (2)அல்(1) அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்:(ப்ரபிதாமஹி) . . . . . . . . . . .(3) அல்(2) (அம்மா உள்ளவர் மட்டும்) அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: (பிது: ப்ரபிதாமஹி) . . . . . . . . .(3) நாம்நீனாம் அம்மா இல்லாதவர்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாணாம் அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம் அம்மா உள்ளவர்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாணாம் அஸ்மது பிது: மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் குறிப்பு:-அம்மாவுக்கு அப்பா இருப்பவர்கள் கீழுள்ள 2ம் வர்கத்திற்கு பண்ணத் தேவையில்லை. அம்மாவழி கோத்ரம்: . . . . . . . . .கோத்ராணாம் (அம்மாவின் அப்பா) - தாத்தா . . . . . . . . . . (1) (அம்மாவின் அப்பாவின் அப்பா) . . . . . . . . . . (2) (அம்மாவின் அப்பாவின் அப்பாவுக்கு அப்பா) . . . . . . . . . . .(3) சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாணாம் அம்மாவழி கோத்ரம் . . . . . . . . கோத்ராணாம் (அ)-(அம்மாவுக்கு அம்மா இல்லாதவர்கள் மட்டும்) (ஆ)-அம்மாவுக்கு அம்மா பெயர் : . . . . .. . . . . . . . (1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . .. . . . (2)(1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . .. . . . . .(3)(2) (அ-அம்மம்மா உள்ளவர் மட்டும்) அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . .ஃ(3) நாம்நீனாம் (அ) - வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹி, மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீணாம் (ஆ) - வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீ, மாது: ப்ரப்ரபிதாமஹீணாம் (அல்லது மாதாமஹஸ்ய ப்ரபிதாமஹீணாம்) அமாவாசைக்கு:- உபயவம்ச பித்ரூணாம்ச அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண கரிஷ்யே! இடுக்குப் பில்லை தெற்கே சேர்க்கறது. மாதப் பிறப்பிற்கு:-உபயவம்ச பித்ரூணாம்ச அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் .... சங்க்ரமண புண்ய காலே .... ( மாதத்தின் பெயர்) சங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண கரிஷ்யே! இடுக்குப் பில்லை தெற்கே சேர்க்கறது. ஸ்தல ப்ரோக்ஷணம் (குறுகிய ஒலியுடன் முடியக் கூடாது என்பதற்காக தேவையற்ற இடங்களில் கூட துணை எழுத்து நீட்டல் ஒலிக்காக சேர்க்கப்பட்டுளது. வேதம் வாக்கியங்கள் இட்டலைஸ்டு செய்யப்பட்டுள்ளது. ) அருகிலுள்ள படத்தில் கண்டுள்ளபடி கிழக்கு மேற்காக 3 தர்பம் சற்று இடைவெளி விட்டு 3 தர்பம் சேர்த்து கிழக்கில் பித்ரு வர்கத்திற்கு 2 புக்னங்களும், மேற்கில் மாதாமஹ வர்கத்திற்காக 2 புக்னங்களும் தெற்கு நுனியாக வைக்க வேண்டும். இவற்றை வாழை இலை அல்லது பித்தளை அல்லது எவர்சில்வர் தாம்hபளத்தில் வைத்துக் கெ;hள்ளலாம். டீhரபயெஅ ளுநவவiபெ அபஹதா: - அசுரா: - ரக்ஷாகும்ஸி - பிசாசா: யேக்ஷயந்தி - ப்ருதிவீமநு - அந்யத்ரேத: - கச்சந்து - யத்ரைஷாம் - கதம்மமந: - உதீரதாம் - அவர - உத்பராஸ: - உந்மத்யமா: - பிதர: - ஸோம்யாஸ: - அஸும் - யஈயு: - அவ்ருகா: - ருதஜ்ஞா: - தேநோவந்து - பிதரோஹவேஷு ! அபவித்ர: - பவித்ரோவா - ஸர்வாவஸ்தாம் - கதோபிவா - யஸ்மரேது - புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய-ஆப்யந்தரசுசி:! பூர்புவஸ் ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ் ஸுவ: ஸ்ரீமதே புண்டாPகாக்ஷாய நம: (எள்ளும் ஜலமுமாக தர்பணம் பண்ணும் இடத்தில் (தாம்பாளத்தில்) ப்ரோக்ஷpக்றது)
கிழக்கிலுள்ள பித்ரு வர்க புக்னங்களில் ஆவாஹனம்
ஆயாத பிதர: - ஸோம்யாகம்பீரை: - பதிபி: - பூர்வ்யை: - ப்ரஜாம் - அஸ்மப்யம் - தத: - ரயிஞ்சா - தீர்காயுத்வஞ்சா - சதசாரதஞ்சா அப்பாவழி கோத்ரம் .. . . . . . . . . . . . கோத்ராநு அப்பா பெயர் : . . . . . . . . . . . . (1) அப்பாவுக்கு அப்பா பெயர்: . . . . . . . . . . . . (2) அப்பாவுக்கு அப்பாவின் அப்பா பெயர்: . . . . . . . . . . . . .(3) சர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு அப்பாவழி கோத்ரம் . . . . . . . . . . . . . . கோத்ரா: (அம்மா இல்லாதவர்கள் மட்டும்) - அம்மா பெயர் : . . . . . . . . . . . . (1) (அம்மா உள்ளவர் ஃ இல்லாதவர் யாராயினும்) - அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . . (2)ஃ(1) (அம்மா உள்ளவர் ஃ இல்லாதவர் யாராயினும்) அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . . . . . . . . .(3)ஃ(2) (அம்மா உள்ளவர் மட்டும்) அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . . .ஃ(3) நாம்நீ: அம்மா இல்லாதவர்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாநு அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீச்ச ஆவாஹயாமி அம்மா உள்ளவர் மேலே உள்ளதைத் தவிர்த்து இதைமட்டும் சொல்லவும்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாநு அஸ்மது பிது: மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீச்ச ஆவாஹயாமி (கிழக்கே முதல் வரிசை புக்னத்தில் எள் சேர்க்கறது இதே வர்கத்திற்கு இப்போது ஆஸனம்)
ஆசனம்
ஸக்ருதாச்சின்னம் - பர்ஹி: - ஊர்ணாம்ருது- ஸ்யோநம் - பித்ருப்யஸ்ச்ச- பராம்யஹம் - அஸ்மிநுஸீதந்துமே - பிதர:ஸோம்யா: - பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்சா - அனுகைஸ்ஸஹ அப்பாவழி கோத்ரம் .. . . .. . . . . . கோத்ராணாம் அப்பா பெயர் : . . . . . . . . . . . . (1) அப்பாவுக்கு அப்பா பெயர்: . . . . . . . . . . . . (2) அப்பாவுக்கு அப்பாவின் அப்பா பெயர்: . . . . . . . . . . .(3) சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் அப்பாவழி கோத்ரம் . . . . . . . . . கோத்ராணாம் (அம்மா இல்லாதவர்கள் மட்டும்) - அம்மா பெயர் : . . . . . . . . . . . . (1) (அம்மா உள்ளவர் ஃ இல்லாதவர் யாராயினும்) - அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . . (2)ஃ(1) (அம்மா உள்ளவர் ஃ இல்லாதவர் யாராயினும்) அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . . . . . . . . .(3)ஃ(2) (அம்மா உள்ளவர் மட்டும்) அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . .. . . . . .ஃ(3) நாம்நீநாம் அம்மா இல்லாதவர் மட்டும்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாணாம் அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்ச்ச இதமாஸனம், இதமர்ச்சனம். (எள் சேர்க்கறது) அம்மா உள்ளவர் மட்டும்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாநாம் அஸ்மது பிது: மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்ச்ச இதமாஸனம், இதமர்ச்சனம் (எள் சேர்க்கறது- எள் ஜலம் வைத்துக்கொண்டு) ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு. (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) குறிப்பு:-அம்மாவுக்கு அப்பா இருப்பவர்கள் கீழுள்ள 2ம் வர்கத்திற்கு பண்ணத் தேவையில்லை.
மாதாமஹ வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்
ஆயாத மாது: பிதர: - ஸோம்யாகம்பீரை: - பதிபி: - பூர்வ்யை: - ப்ரஜாம் - அஸ்மப்யம் - ததத: - ரயிஞ்சா - தீர்காயுத்வஞ்சா - சதசாரதஞ்சா அம்மாவழி கோத்ரம்: . . . . . . . . . .கோத்ராநு (அம்மாவின் அப்பா) - தாத்தா . . . . . . . . . . . . (1) (அம்மாவின் அப்பாவின் அப்பா) . . . . . . . . . . . . (2) (அம்மாவின் அப்பாவின் அப்பாவுக்கு அப்பா) . . . . . . . . . . . . .(3) சர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநு அம்மாவழி கோத்ரம் . . . . . . .. . கோத்ரா: அ - அம்மாவுக்கு அம்மா இல்லாதவர்கள் ஆ - அம்மாவுக்கு அம்மா உள்ளவர்கள் (அ)-அம்மாவுக்கு அம்மா பெயர் : . . . .. . . . . . . . (1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . (2)ஃ(1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . . . . . .. .(3)ஃ(2) (அ-அம்மம்மா உள்ளவர் மட்டும்) அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . .ஃ(3) நாம்நீ: (அ) மட்டும்: - வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாதாமஹி, மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீச்ச ஆவாஹயாமி (ஆ) மட்டும்: - வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீ, மாது: ப்ரப்ரபிதாமஹீச்ச ஆவாஹயாமி! (மேற்கே உள்ள புக்னத்தில் எள் சேர்க்கறது)
மாதாமஹ வர்கத்தில் ஆஸனம்:
ஸக்ருதாச்சின்னம் - பர்ஹி: - ஊர்ணாம்ருது- ஸ்யோநம் - பித்ருப்யஸ்ச்ச- பராம்யஹம் - அஸ்மிநுஸீதந்துமே - மாது: பிதர:ஸோம்யா: - மாது: பிதாமஹா: - மாது: ப்ரபிதாமஹாஸ்சா - அனுகைஸ்ஸஹ அம்மாவழி கோத்ரம்: . . . . . .கோத்ராணாம் (அம்மாவின் அப்பா) - தாத்தா . . . . . . . . . (1) (அம்மாவின் அப்பாவின் அப்பா) . . . . . . . . . (2) (அம்மாவின் அப்பாவின் அப்பாவுக்கு அப்பா) . . . . . . . . . .(3) சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாணாம் அம்மாவழி கோத்ரம் . . . . . . . . கோத்ராணாம் அ - அம்மாவுக்கு அம்மா இல்லாதவர்கள் ஆ - அம்மாவுக்கு அம்மா உள்ளவர்கள் (அ)-அம்மாவுக்கு அம்மா பெயர் : . . . .. . . . . . . . (1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . (2)ஃ(1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . . . . . .. .(3)ஃ(2) (அ-அம்மம்மா உள்ளவர் மட்டும்) அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . .......ஃ(3) நாம்நீனாம் (அ)மட்டும் :- வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹி, மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீணாம்ச (ஆ)மட்டும்:- வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீ, மாது: ப்ரப்ரபிதாமஹீணாம்ச (அல்லது மாதாமஹஸ்ய ப்ரபிதாமஹீணாம்) இதமாஸனம் இதமர்ச்சனம். (எள் சேர்க்கறது) ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸமத் மாது: பித்ரூநு. (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது)
பித்ரு வர்க்க புக்னத்தில் தர்ப்பணம் (அப்பா கோத்ரம்)
1. உதீரதாம் - அவர - உத்பராஸ: - உந்மத்யமா: - பிதர: - ஸோம்யாஸ: - அஸ{ம் - யஈயு: - அவ்ருகா: - ருதஜ்ஞா: - தேநோவந்து - பிதரோ ஹவேஷு! . . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 2.அங்கிரஸோந: - பிதர: - நவக்வா: - அதர்வாண: - ப்ருகவ: - ஸோம்யாஸ: - தேஷாம் - வயம் - ஸ{மதௌ - யஜ்ஞியாநாம் - அபிபத்ரே - ஸெளமனஸே - ஸ்யாமா! . . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 3. ஆயந்துந: - பிதர: - மநோஜவஸ: - அக்நிஷ்வாத்தா: - பதிபி: - தேவயானை: - அஸ்மிநு - யஜ்ஞே - ஸ்வதயாமதந்து - அதிப்ருவந்து - தேஅவந்து - அஸ்மாநு! . . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 4. ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸமத் பித்ரூநு. . . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 5. பித்ருப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதா நம: - பிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - ப்ரபிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - அக்ஷந்பிதர:! . . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 6. யே சேஹா - பிதர: - யேசநேஹா - யாகு(ம்)ச்சா - வித்மயாநு - உசநா - ப்ரவித்மா - அக்நே - தாநுவேத்தா - யதிதே - ஜாதவேத: - தயா - ப்ரத்தம் - ஸ்வதயாமதந்து . . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 7. மதுவாதா: - ருதாயதே - மதுக்க்ஷரந்தி - ஸிந்தவ: - மாத்வீர்ந: - ஸந்த்வோஷதீ: ! . . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 8. மதுநக்தம் - உதோஷஸி - மதுமது - பார்த்திவம் - ரஜ: - மது த்யௌ: - அஸ்துந: பிதா . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத்ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 9. மதுநாந்ந: - வநஸ்பதி: - மதுநாநு - அஸ்துஸ_ர்ய: - மாத்வீ: - காவோபவந்துந:! . . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) . . . . கோத்ரா: . . . . நாம்நீ: வசு பத்நி ரூபா: அஸ்மத் மாத்ரு: ஃ பிதாமஹீ: (அம்மா/பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) . . . . கோத்ரா: . . . நாம்நீ: ருத்ர பத்நி ரூபா: அஸ்மத் பிதாமஹீ: ஃ பிது: பிதாமஹீ: (பாட்டி/கொள்பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) . . . கோத்ரா: . . . . நாம்நீ: ஆதித்ய பத்நி ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஃ பிது: ப்ரபிதாமஹீ: (கொள்பாட்டிஃஎள்பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்) ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூ பத்நீ: ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி! (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு! - த்ருப்யத த்ருப்யத த்ருப்யதா.
மாதாமஹ வாக்க புக்னத்தில் தர்பணம் (அம்மா வழி கோத்திரம் பெயர்கள்)
1.உதீரதாம் - அவர - உத்பராஸ: - உந்மத்யமா: - பிதர: - ஸோம்யாஸ: - அஸ{ம் - யஈயு: - அவ்ருகா: - ருதஜ்ஞா: - தேநோவந்து - பிதரோ ஹவேஷு! . . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 2.அங்கிரஸோந: - பிதர: - நவக்வா: - அதர்வாண: - ப்ருகவ: - ஸோம்யாஸ: - தேஷாம் - வயம் - ஸ{மதௌ - யஜ்ஞியாநாம் - அபிபத்ரே - ஸெளமனஸே - ஸ்யாமா! . . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 3.ஆயந்துந: - பிதர: - மநோஜவஸ: - அக்நிஷ்வாத்தா: - பதிபி: - தேவயானை: - அஸ்மிநு - யஜ்ஞே - ஸ்வதயாமதந்து - அதிப்ருவந்து - தேஅவந்து - அஸ்மாநு! . . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 4.ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு. . . . கோத்ராநு . அம்மாவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 5. பித்ருப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதா நம: - பிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - ப்ரபிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - அக்ஷந்பிதர: . . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 6.யே சேஹா - பிதர: - யேசநேஹா - யாகு(ம்)ச்சா - வித்மயாநு - உசநா - ப்ரவித்மா - அக்நே - தாநுவேத்தா - யதிதே - ஜாதவேத: - தயா - ப்ரத்தம் - ஸ்வதயாமதந்து . . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 7.மதுவாதா: - ருதாயதே - மதுக்க்ஷரந்தி - ஸிந்தவ: - மாத்வீர்ந: - ஸந்த்வோஷதீ: ! . . . கோத்ராநு . அம்மாவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 8.மதுநக்தம் - உதோஷஸி - மதுமது - பார்த்திவம் - ரஜ: - மது த்யௌ: - அஸ்துந: பிதா! . . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) 9.மதுநாந்ந: - வநஸ்பதி: - மதுநாநு - அஸ்துஸ_ர்ய: - மாத்வீ: - காவோபவந்துந:! . . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி ! (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) (அம்மா இல்லாதவர்கள் மட்டும் : .............. கோத்ரா: ..................... நாம்நீ: வஸு பத்நி ரூபா: அஸ்மத் மாத்ரூ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்)) . . . . கோத்ரா: . . . நாம்நீ: வசு பத்நி ரூபா: அஸ்மத் மாதாமஹீ: (அம்மாவின் அம்மா) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்) . . . . . கோத்ரா: . . . நாம்நீ: ருத்ர பத்நி (வசு பத்நி) ரூபா: அஸ்மத் மாது: பிதாமஹீ: (அம்மாவின் பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) . . கோத்ரா: . . . நாம்நீ: ஆதித்ய பத்நி (ருத்ர பத்நி)ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: (அம்மாவின்கொள்பாட்டி) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) . . கோத்ரா: . . . நாம்நீ: ஆதித்ய பத்நி ரூபா: அஸ்மத் மாது: ப்ர ப்ரபிதாமஹீ: (அம்மாவின் அப்பாவின் கொள்பாட்டி) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்) ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூ பத்நீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்) (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் மாது: பித்ரூநு! - த்ருப்யத த்ருப்யத த்ருப்யதா. (கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது) கையைக் கூப்பிக்கொண்டு உபஸ்தானம் (கையைக் கூப்பிக் கொண்டு): நமோவ: - பிதரோ ரஸாயா நமோவ: - பிதர: - சூஷ்மாயா நமோவ: - பிதரோ ஜீவாயா நமோவ: - பிதர: - ஸ்வதாயை நமோவ: - பிதரோமந்யவே நமோவ: - பிதரோ கோராயா - பிதரோ நமோவ: ய ஏதஸ்மிந் - லோகேஸ்தா யுஷ்மாகும்ஸ்தேநு - யேஸ்மிந்லோகே - மாம்தேநு - ய ஏதஸ்மிந் லோகேஸ்தா - யூயம்தேஷாம் - வஸிஷ்டா பூயாஸ்தா - யேஸ்மிந் லோகே அஹம் தேஷாம் - வஸிஷ்டோ பூயாஸம். (எழுந்திருக்கவேண்டியது உபவீதம் பண்ணிக்கொண்டு (தாம்பாளத்தை) மூன்று தரம் ப்ரதக்ஷpணமாக சுற்றி வரவேண்டியது) வாஜே வாஜே - அவத வாஜிந: - நோதநேஷ{ - விப்ரா: - அம்ருதா: - ருதஜ்ஞா: - அஸ்யமத்வ: - பிபதா - மாதயத்வம் - த்ருப்தாயாதா - பதிபி: - தேவயாநை: - தேவதாப்ய: - பித்ருப்யஸ்ச்சா - மஹாயோகிப்ய: - நமஸ்வதாயை - ஸ்வாஹாயை - நித்யமேவ - நமோ நம: ஸேவித்து அபிவாதி பண்ணவேண்டியது.
யதாஸ்தானம் பண்ணுதல்
உட்கார்ந்து ப்ராசீனாவீதியில் எள்கொண்டு அப்பாவழி கோத்ரம் .. . . . . . . . . . . . கோத்ராநு அப்பா பெயர் : . . . . . . . . . . . . (1) அப்பாவுக்கு அப்பா பெயர்: . . . . . . . . . . . . (2) அப்பாவுக்கு அப்பாவின் அப்பா பெயர்: . . . . . . . . . . . . .(3) சர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு அப்பாவழி கோத்ரம் . . . . . . . . . . . . . . கோத்ரா: (அம்மா இல்லாதவர்கள் மட்டும்) - அம்மா பெயர் : . . . . . . . . . . . . (1) (அம்மா உள்ளவர் ஃ இல்லாதவர் யாராயினும்) - அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . . (2)ஃ(1) (அம்மா உள்ளவர் ஃ இல்லாதவர் யாராயினும்) அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . . . . . . . . .(3)ஃ(2) (அம்மா உள்ளவர் மட்டும்) அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . . .ஃ(3) நாம்நீ: அம்மா இல்லாதவர்:- வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாநு அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீச்ச வசு ருத்ர ஆதித்ய பத்நி ஸ்வரூபாநு அஸ்மது பிதாமஹி பிது: பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீச்ச யதாஸ்தானம்; ப்ரதிஷ்டாபயாமி பித்ரு வர்க புக்நத்தில் எள் சேர்க்கறது. அம்மாவழி கோத்ரம்: . . . . . . . . . .கோத்ராநு (அம்மாவின் அப்பா) - தாத்தா . . . . . . . . . . . . (1) (அம்மாவின் அப்பாவின் அப்பா) . . . . . . . . . . . . (2) (அம்மாவின் அப்பாவின் அப்பாவுக்கு அப்பா) . . . . . . . . . . . . .(3) சர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநு அம்மாவழி கோத்ரம் . . . . . . .. . கோத்ரா: அ - அம்மாவுக்கு அம்மா இல்லாதவர்கள் ஆ - அம்மாவுக்கு அம்மா உள்ளவர்கள் (அ)-அம்மாவுக்கு அம்மா பெயர் : . . . .. . . . . . . . (1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . (2)ஃ(1) (அ), (ஆ) இருவரும் அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அம்மா பெயர்: . . . . . . . . . .. .(3)ஃ(2) (அ-அம்மம்மா உள்ளவர் மட்டும்) அம்மாவின் அப்பாவுக்கு அப்பாவின் அப்பாவுக்கு அம்மா பெயர்: . . . . . . . . . . . .ஃ(3) நாம்நீ: (அ) மட்டும்: - வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாதாமஹி, மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீச்ச யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி (ஆ) மட்டும்: - வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாது:பிதாமஹி, மாது: ப்ரபிதாமஹீ, மாது: ப்ரப்ரபிதாமஹீச்ச யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி! (மேற்கே உள்ள மாதாமஹ புக்னத்தில் எள் சேர்க்கறது) 2 வர்க்க புக்னங்களையும் பிரித்துக் கொள்ளவேண்டியது. தர்ப்ப நுனிகள் கட்டைவிரல் புறமாக இருக்கும்படி வைத்துக் கொண்டு சிறிது எள் சேர்த்துக் கொண்டு பின் வரும் மந்திரம் முடியும்போது ஜலம் சேர்த்து எல்லாவற்றையும் தாம்பாளத்தில் கட்டைவிரல் புறமாக சேர்த்துவிட வேண்டியது) ஏஷாநு - நஸுத: - நப்ராதா - நபந்து: - நஅந்ய கோத்ரீண: - தேத்ருப்திம் - அகிலாயாந்து - மயா த்யக்தை: - குசோதகை: - த்ருப்யத - த்ருப்யத - த்ருப்யதா உபவீதி பண்ணிக்கொண்டு பவித்ரம் பிரித்துப்போட்டு ஆசமனம். வடகலை மட்டும் : பகவாநேவ ... உத்திஸ்ய சக்ருண் மஹாளய ச்ராத்தம் திலதர்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவாநு இரு கலையாரும்: காயேநவாசா மநஸே இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ருஹ்ருதே: ஸ்வபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி! ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்த்து அச்சுயுதப்ரீயதாம்! குறிப்பு:- இதை அமாவாசை மற்றும் மாதப் பிறப்பு தர்பணங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். புரியாத விஷயங்கள் இருந்தால் தயங்காமல் ஈமெயில் செய்யவும். தயவுசெய்து ‘வைதீகம்” ஈகுரூப் வழியாக உங்கள் அனைத்து சந்தேகங்களையும் அநுப்பி தெளிவு பெற்றால் குரூப்பில் உள்ள மற்றவர்களுக்கும் அது உபயோகமாக இருக்கும். உங்கள் வைதீக தேவைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிறைவேற்றப் படும். ஸேவை நோக்கில் செய்யப்படும் இதற்கு கட்டணங்கள் எதுவும் முக்கிய மில்லை. ‘நன்கொடைகள் ஏற்கப்படும்” Contact Me!

Monday, September 21, 2009

Useful download-from-ahobilam.com

மந்திரம் - ஒலி பதிவிறக்கம் மந்திரம் - எழுத்து பதிவிறக்கம்
ஸாம உபாகர்மா ஆடியோஸாம உபாகர்மா தமிழ்-ஆங்கிலம் - ஸம்ஸ்க்ருதம்
Thiruppavai Thiruppaliezhuchi பஞ்சாங்கம்-2008-09
Madhyahnigam - 13 minutes ஸந்தியாவந்தனம்
ஸந்தியாவந்தனம்காலை ஸாம வேத ஸமிதாதானம்
ஸாம ஒளபாஸனம் தர்பணம் ஸாமம் ஐயர்
ஸாம ச்ராத்தம் மஹாளயபக்ஷ தர்பணம்
அமாவாசை தர்பணம் Panjangam-2009-10-pdf
நித்யவிதி பாகம்-1 பாகம்-2 பாகம்-3 ஸாம உபாகர்மா 2008
சுபஸ்வீகாரம் உபந்யாஸம் யஜூர் உபாகர்மா 2009-English
ஸாம உபாகர்மா 2006 பரந்தாமன் பஞ்சாங்கம் வ்யய
பரந்தாமன் பஞ்சாங்கம் ஸர்வஜித்
யஜூர் உபாகர்மா 2009 Tamil
Bhodhayana - Upakarma
Prathama Upakarma things list.pdf
Thiruppavai with beautiful pictures
Audios :- Text :-

Saturday, September 19, 2009

Few Listings under "Anushtanam" & Links

அநுஷ்டானம்
காலை தர்மம் : ஸ்நாநம் செய்வதற்கு முன் முடிக்க வேண்டிய காலைக் கடன்களில் கடைபிடிக்கப்படவேண்டிய சாஸ்திர வழி முறைகளைப்பற்றியது. அதுபற்றிய மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஸ்நாந விதி க்ரமப்படி ஸ்நாநம் செய்ய சங்கல்பம் இத்யாதி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
வஸ்த்ர தாரணம் வைதீக முறைப்படி துணி உடுத்திக் கொள்ள உதவி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
புண்ட்ர தாரணம் : திருமண் காப்புத் தரித்துக்கொள்ள உதவி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
குரு பரம்பரை த்யானம் வைதீக கடமையைத் துவங்கும் முன் ஸம்ப்ரதாயப்படி தன்னுடைய ஆசார்யன் அவருக்கு ஆசார்யன் என எம்பெருமான் வரையிலான குரு பரம்பரையை த்யானிக்க வேண்டும். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஸந்தியா வந்தனம் : ப்ராம்மணனாக இருக்க அடிப்படை இந்த த்ரிகால ஸந்தியாவந்தனமே. ஸந்தியாவந்தனம் செய்யாதவன் தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவன். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ப்ரஹ்மச்சாரிகளுக்குறிய ப்ரத்யேக அநுஷ்டானங்கள்: ப்ரஹ்மச்சாரிகளுக்கு மிஞ்சி மேகலை அணிதல், தண்டம் தரித்தல், ஸமிதாதானம் போன்ற கடமைகள்பற்றியது. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மணமான ஸ்த்ரீகள் அநுஷ்டானம்: ஸ்த்ரீகளுக்கென்று சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பெருமாள் ஆராதனம்: பாகவதன் என்பவன் பெருமாளுக்குப் பிரியமானவன். தான் உபயோகிக்கும் எந்த வஸ்துவையும் எம்பெருமானுக்குச் ஸமர்ப்பித்து அவனுடைய ப்ரசாதமாக ஏற்றுக் கொண்டு பின் அநுபவிப்பவனே உண்மையான பக்தனும் பாகவதனும் ஆவான். அவனுக்கு பகவதாராதனம் மிக முக்கியம். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தீட்டு விஷயம் : பங்காளிகள், தாயாதிகள் க்ருஹங்களில் ஏற்படும் பிறப்பு, இறப்பு இவற்றால் உறவின் நெருக்கத்தைப் பொருத்து குறிப்பிட்ட நேரம் அல்லது நாட்கள் சில வைதீக காரியங்களைச் செய்ய இயலாத தீட்டுக் காலம் பற்றி அறிவது. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Download Useful Vaideekam Contents from www.ahobilam.com

மந்திரம் - ஒலி பதிவிறக்கம் மந்திரம் - எழுத்து பதிவிறக்கம்
ஸாம உபாகர்மா ஆடியோஸாம உபாகர்மா தமிழ்-ஆங்கிலம் - ஸம்ஸ்க்ருதம்
Thiruppavai Thiruppaliezhuchi பஞ்சாங்கம்-2008-09
Madhyahnigam - 13 minutes ஸந்தியாவந்தனம்
ஸந்தியாவந்தனம்காலை ஸாம வேத ஸமிதாதானம்
ஸாம ஒளபாஸனம் தர்பணம் ஸாமம் ஐயர்
ஸாம ச்ராத்தம் மஹாளயபக்ஷ தர்பணம்
அமாவாசை தர்பணம் Panjangam-2009-10-pdf
நித்யவிதி பாகம்-1 பாகம்-2 பாகம்-3 ஸாம உபாகர்மா 2008
சுபஸ்வீகாரம் உபந்யாஸம் யஜூர் உபாகர்மா 2009-English
ஸாம உபாகர்மா 2006 பரந்தாமன் பஞ்சாங்கம் வ்யய
பரந்தாமன் பஞ்சாங்கம் ஸர்வஜித்
யஜூர் உபாகர்மா 2009 Tamil
Bhodhayana - Upakarma
Prathama Upakarma things list.pdf
Thiruppavai with beautiful pictures
Audios :- Text :-

Friday, September 18, 2009

மஹா சுதர்ஸன ஹோம வழிமுறைகள் மற்றும் பலன்கள்

ஸ்ரீ:
Niyamams-phalans-of-sudharshanahomam ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோம வழிமுறைகள் மற்றும் பலன்கள்
1. சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்? ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்;றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மைப் ¾பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு® வாழவைக்கிறார். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம். எனவே இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெற, நடத்திக்கொடுப்பவர் மிகுந்த பக்தி ச்ரத்தை, நீண்ட அநுபவம், வைராக்ய அநுஷ்டானம், நல்ல கைராசி, ©ர்ண வாக் பலிதம் இவையே மிகவும் முக்கியமாகும். இவற்றுடன் வேதாப்யாசமும் உள்ளவராயின் மிகவும் நன்மை உண்டாகும்.
2. ஸ்ரீசுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க: ஆத்தில் உள்ள பெரியவர்கள் அல்லது குடும்பத் தலைவரின் ஜன்ம மாத ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹ_ர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். விழுப்புத் தீட்டு கலக்காமல் சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும். (நல்ல பலன் ஏற்படவேண்டும் என்ற விதி உள்ளவர்களுக்கே அவர்கள் முயற்சிக்குத தக்க இப்படிப்பட்ட வாய்ப்பு தாமாகவே உருவாகும்)
3. ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தில் அல்லது எப்போதுமே பெருமாளிடம் தன்னுடைய கோரிக்கைகளை தெரிவிக்கவேண்டிய முறை: தனக்கு ஒரு சொந்த வீடு அமையவேண்டும் என்றால் ¾பெருமாளே எனக்கு ஒரு சொந்தவீடு நீ தரவேண்டும்® என்று வேண்டக்கூடாது பதிலாக ¾பெருமாளே அடியேன் ஒரு சொந்தக் குடிலை அமைத்துக்கொள்ள தேவையான சக்தியினையும், அதற்குகந்ததான மற்ற அநுகூலங்களையும் அது ஸம்பந்தமான அடியேன் முயற்சிகளில் கால தாமதமும் ஏமாற்றமும் இன்றி நல்ல இடத்தையும் நல்ல மனிதர்களையும் காட்டிக் கொடுத்து ஒரு நல்ல க்ருஹம் அமைய ஆவன செய்ய வேண்டுமாய்ப் ப்ரார்திக்கிறேன்® என்றும் வேண்டிக்கொள்ளவேண்டும். சங்கல்பத்திலேயே தங்கள் கோரிக்கைகளைச் சேர்க்க வாத்தியாரிடம் கீழ்கண்ட தகவல்களைத் தரவேண்டும். 1. தங்கள் நக்ஷத்திரம் 2. ராசி 3.கோத்திரம் 4. சர்மண் (ஆண்களுக்கு உபநயனத்தின் போதும் பெண்களுக்கு திருமணத்தின்போதும் வைக்கப்படும் வைதீக பெயர்) 5. ஹோமம் நடத்தும் யஜமானனுக்கு உறவு 6. தங்கள் கோரிக்கை (விண்ணப்பம் வெளியில் சொல்ல முடியாததாயின் நினைத்தது நிறைவேற என்று சொல்லலாம்) என்ற ரீதியில் முன்கூட்டி ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி தயாரித்து வைத்துக்கொள்வது நலம். ஹோமம் நடக்கும் காலத்தில் மந்திர சப்தம் தவிர வேறு எந்த அப சப்தமும் (பேச்சும்) இல்லாமல் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.
4. ஹோமம் நிர்ணயிக்கப்;பட்ட நாளுக்கு முதல் நாளே க்ருஹத்திலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழுக்கு மற்றும் துர்வாசனை இன்றி அனைத்து இடங்களையும் அலம்பித் துடைத்து தேவையான இடங்களில் வண்ண வண்ணமாகக் கோலமிட்டு வைக்கவேண்டும். அனைவருக்கும் மடித்துணிகள் உலர்த்தி வைக்கவேண்டும். ஹோமம் நடைபெறும் நாளில் அடிக்கடி மலம் சிறுநீர் தொந்திரவு ஏற்படாத வகையில் வயிற்றையும் உடம்பையும் தகுந்த ஆகார நியமத்துடன் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்து தீர்த்தமாடி மடி உடுத்தி வாசலில் மாவிலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரித்து வாசலில் பெரிதாக அழகாக கோலங்கள் போட்டு வைத்து, வருபவர்கள் கால் சோதித்துக் (அலம்பிக்) கொண்டு உள்ளே வருவதற்கு ஏதுவாக ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்து மொண்டு ஆள்வதற்கு ஒரு சுத்தமான பாத்திரமும் எடுத்து வைக்கவேண்டும். சாம்பிராணி து}பம் தயார் செய்து ஒவ்வொரு அறையிலும் நன்றாகப் பரவச் செய்து மணம் கமழ வைக்கவேண்டும். ஆத்தில் உள்ள பெருமாள் அறையில் உள்ள பழைய குப்பைகளை நன்றாகத் துடைத்து படங்களையும் கழற்றி நன்றாகத் துடைத்து மாட்டி வைக்கவேண்டும். பெருமாள் திருவாராதன பாத்திரங்கள் மணி, சொம்பு, ஸ்தாலி போன்ற அனைத்தையும் புளி, சாணி போட்டு கேஸவாதி 12 நாமங்களைக் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே ஜ்வலிக்கும்படியாக சுத்தி பண்ணி வைக்கவேண்டும். ஆத்தில் நம் குடும்பத்தைச் சேர்ந்த மிக நெருங்கிய பந்துக்கள் அண்ணா தம்பிகள் சித்தப்பா பெரியப்பாக்கள் ஆத்தில் உள்ள சாளக்ராம பெருமாள்களையெல்லாம் மடியாக ஏளப்பண்ணி கொண்டு வரலாம். அதுபோல் பெருமாள் விக்ரஹங்கள் இருந்தாலும் ஏளப்பண்ணலாம். ஹோமம் நடக்கப்போகும் அறையில் உள்ள வெப்பத்தால் சேதமடையக்கூடிய மெல்லிய ப்ளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், கண்ணாடி பொருட்கள் இவற்றை பத்திரமாக அப்புறப்படுத்தி வைத்துவிடுவது நல்லது.
காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும். நாம் மனதில் எண்ணுவதை மனிதர்களால் வேண்டுமானால் உணர முடியாது, பெருமாளுக்கோ, தர்ம தேவதைக்கோ அறிய முடியாமல் போகாது. தர்ம தேவதையின் தீர்ப்புகள் நம் ஒவ்வொரு எண்ணம் செயல்பாடு அனைத்தும் முடிவுறும் அந்த க்ஷணத்திலேயே வழங்கப்பட்டு பாப ஃ புண்ணிய கணக்குகள் ஒவ்வொரு நொடிக்கும் அப்டேட் செய்யப்படும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளன. அந்த நாளில் கண்ணில் படும் ஆண் பெண் அனைவரையும் பெருமாள் தாயாராகவே எண்ணியிருக்கவேண்டும். எந்த வஸ்த்துவில் எந்த இடத்தில் எந்த தேவதைகள் இருப்பரோ என எண்ணி, அலட்சிய மனோபாவம் சிறிதும் இன்றி மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். அப்படி கவனமாக இருந்து நம் சிரத்தையினால் அடுத்தவர்கள் சிரத்தை அதிகரிக்கும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். அசிரத்தையாகக் காணப்படுபவரிடம்கூட அசூயை இன்றி மிகவும் பக்குவமாக அந்த ஸன்னிவேசத்தை மாற்றி அமைக்கவேண்டும். இப்படி சிரத்தையாக இருந்து சிரத்தையாக ஹோமங்கள் நடக்கும் இடத்தில் மஹா விஸ்வாசமும் மஹா பாக்யமும் உள்ளவர்களுக்கு பெருமாள் ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக ப்ரத்யக்ஷமாவார் அந்த அநுபவமானது இதுவரை தங்கள் தங்கள் ஆயுளில் தாங்கள் எதுவெல்லாம் மஹத்தான மறக்க இயலாத இன்பம் என்று எண்ணியிருந்தீரோ அதைப்போல் பலமடங்கு இன்பம் தானாக உடல் எங்கும் பரவி மனத்தில் ஒரு அளவிடமுடியாத சாந்தியை உணரலாம். அதுவே பெருமாள் அநுக்ரஹம் பூரணமாக கிடைத்ததற்காக அறிகுறி. இந்த அநுபவம் ஏற்படாவிட்டால் தோல்வி என்று பொருள் அல்ல. அதை அநுபவிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை என்பதே பொருள். ‘பலன்” என்பதன் பொருள் என்ன? நாம் செய்யும் ஒரு செயலுக்கான எதிர் விளைவு நமக்கு அநுகூலமாக அதாவது பேவரபிளாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது இந்த ஸ{தர்சன ஹோமம் பண்ணுவதால் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பார்ப்போம்.
பலன்கள் இரண்டு வகைப்படும். 1. த்ருஷ்ட பலன் 2. அதிர்ஷ்ட பலன்
1. த்ருஷ்ட பலன்: கண்கூடாகத் தெரியக்கூடிய அல்லது அறியக்கூடிய விஷயங்கள்
2. அதிர்ஷ்ட பலன்: நேரடியாகத் தெரியாதது, காலக்ரமத்தில் உணர்ந்து அறியக்கூடியது.
த்ருஷ்ட பலன்கள்:- 1. குறிப்பிட்ட நாளில் உடல் து}ய்மை பெருகிறது.
2. மனம் து}ய்மை பெருகிறது.
3. இல்லம் து}ய்மை பெருகிறது.
4. பிறரால் கவனிக்கப்படுகிறோம்.
5. பிறரால் மதிக்கப்படுகிறோம்.
6. பிறரரால் வாழ்த்தப்படுகிறோம்.
7. சுற்றமும் நட்பும் ஓம்பப்படுகிறது,
8. இதற்குண்டான செலவில் பணம் சென்றடைபவரின் குடும்பங்கள் பிழைக்கின்றன.
9. மனிதாபிமானம், மனிதநேயம் போன்றவை வெளிப்படுகின்றன.
10. பொருமை, தன்னடக்கம், ச்ரத்தை போன்ற சிறப்பான ஒழுக்கங்களை பேணும் வைராக்யம் வருகிறது.
11. தங்களின் பண்பு நலன்கள் பிறருக்கு அறியக் கிடைக்கிறது.
12. வந்திருந்தோரின் பண்பு நலன்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.
13. புதிய தகவல்களை அறியும் வாய்ப்பினைப் பெருகிறோம்.
14. மிகுதியான அன்னங்களால் சில ஜீவன்கள் பிழைக்க வகை செய்யப்படுகிறது.
15. சில பொருட்களின் நிலை மாற்றத்தால் ஏற்படும் ரசயான விளைவுகள்.
16. வீட்டைச் சுத்தம் செய்யும்போது சில பழைய பொருட்கள் செப்பனிடப்படுகின்றன.
17. காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கின்றன.
18. சில சமயம் அறிதான சிலருடைய நட்பு கிடைக்கின்றது.
19. அசூயை உடைய வேண்டாத சிலரின் நட்பு களையப்படுகிறது.
20. அறுசுவை உண்டியை விருந்தோடு உண்ணும் வாய்ப்பு கிடைக்கின்றது.
21. தாய் தந்தையர்மீது நாம்கொண்ட அன்பு மரியாதை இவை வெளியிட வாய்ப்பு ஏற்படுகிறது,

அதிர்ஷ்ட பலன்கள்: (இவற்றில் எவற்றிற்கு இந்த ஹோமம் காரணம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது)
1. மனோதிடம் கிடைக்கின்றது.
2. வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.
3. பகவத் ஸேவையின் பேரானந்தம் கிடைக்கிறது.
4. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு ஏற்படுகிறது.
5. பாபங்கள் தொலைந்து புண்ணியங்கள் கிட்டுகிறது.
6. சத்ருக்களின் பலங்கள் குறைகிறது.
7. நண்பர்களின் உதவி பெருகுகிறது.
8. நீண்டநாள் தீராத மனக் கவலை மாறுகிறது.
9. நீண்டநாள் தீராத வியாதி நிவாரணம் பெருகிறது.
10. சுப காரியங்கள் வந்து சேர்கின்றன.
11. மஹான்களின் தரிசனங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன.
12. எதிலும் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் தெரியத் தொடங்குகின்றது.
13. எதிர்பாராத இடங்களில் இருந்து நற்செய்திகள்.
14. சொத்துகள் வாஹன விவகாரங்கள் நல்லமுறையில் தீர்வு பெறுகிறது.
15. திடீர் பணவரவு, பொக்கிஷங்கள் ஆபரணங்கள் கிடைத்தல்.
16. எதிர்பார்த்ததைவிட சுலபமாக விண்ணப்பங்கள் நிறைவேறுதல்
17. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி ஒத்துழைப்பு கிட்டுதல்
18. நற்சான்றுகள் விருதுகள் பட்டயங்கள் கிட்டுதல்.
19. நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாபங்கள் தொலைந்து நற்கதிக்கு வித்தாக அமைகிறது.
20. சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் உண்டாகிறது.

Thursday, September 17, 2009

மஹாளயம் பற்றி சில குறிப்புகள்

Wednesday, September 16, 2009

2009 Deepavali determination - 2009ல் தீபாவளி எப்போது?

Here is the article published in Sri Ranganatha Paduka September 2009